இலங்கைசெய்திகள்

30 வருடங்களுக்கு மேல் பி.பி.சியில் பணியாற்றிய இலங்கையர் மரணம்!!

Death

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிபிசியின் ஊடகவியலாளர் ஜோர்ஜ்அழகையா , மரணமடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

புற்றுநோயுடன் ஒன்பது வருடங்கள் போராடிய நிலையில் அவர்.காலமாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ ஜோர்ஜ் அமைதியான விதத்தில் மரணத்தை தழுவினார் என அவரது முகவரின் அறிக்கை தெரிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களிற்கு மேல் பிபிசியின் தொலைகாட்சியில் ஜோர்ஜ் அழகையா பணியாற்றினார்.

கடந்த 20 வருடங்களாக பிபிசியின் நியுஸ் சிக்சின் தொகுப்பாளராக பணியாற்றினார். அதற்கு முன்னர் பிபிசியின் விருதுகள் பெற்ற வெளிநாட்டு செய்தியாளராக அவர் பணியாற்றியிருந்தார்.

ஜோர்ஜ் அழகையா ,ஈராக் ,ருவண்டா உட்பட பல நாடுகளில் பணியாற்றியிருந்தார். 1990களின் ஆரம்பத்தில் சோமாலியாவில் பஞ்சம் மற்றும் போர் குறித்த செய்திகளிற்காக விருதுகளை பெற்ற ஜோர்ஜ் அழகையா, வடக்கு ஈராக்கில் குர்திஸ் மக்களிற்கு எதிரான சதாம்ஹ சைனின் இனப்படுகொலை குறித்த செய்திகளிற்காக பவ்வா விருதுகளிற்காக நியமிக்கப்பட்டார்.

புருண்டியின் உள்நாட்டு யுத்தம் குறித்த செய்திகளிற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் விருதுகளை பெற்ற இவர், ருவன்டா இனப்படுகொலை குறித்து முதன்முதலில் செய்தி வெளியிட்ட பிபிசி செய்தியாளர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

கொழும்பில் பிறந்த ஜோர்ஜ் மக்ஸ்வெல் அழகையா முதலில்  கானாவிற்கு புலம்பெயர்ந்து பின்னர் பிரிட்டனில் குடியேறினார். இலங்கையிலிருந்து வெளியேறியது மாத்திரமே இலங்கை குறித்த அவரது ஒரே சிறுவயது நினைவாக காணப்பட்டத என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Back to top button