துருக்கி சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
துருக்கிக்கான விஜயத்தின் பின்னர், சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெற்கு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
நேற்றையதினம் நில அதிர்வு கேந்திர ஸ்தானமான கஹரஸ்மன்மராஸ் பகுதிக்கு சென்றுள்ள அவர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்துள்ளது.
இதே வேளை துருக்கி நிலநடுக்கத்தால் 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியா முழுவதும் குறைந்தது 870,000 பேருக்கு உணவுத் தேவைப்பாடு உள்ளது.”எனவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 42.8 மில்லியன் டொலர் நிதியை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு உலக நிறுவனங்களிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது.