துயர் பகிர்தல்மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்!!

Death notice

பிறப்பு : 26.11.1957
இறப்பு : 29.10.2022

ஊரெழு மேற்கு இந்திரானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கதிர்காமநாதன் வசந்தராணி 29.10.2022 அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற வசந்தராசா மனோன்மணி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற இராசரத்தினத்தின் பெறா மகளும் காலஞ்சென்ற வல்லிபுரம் சிவக்கொழுந்து தம்பதிகளின் மருமகளும், கதிர்காமநாதனின் அன்பு மனைவியும் ஆவார்.

ரேவதி, பிரதீபன், பிரஷாத், அதிகஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். வதனி, வரதன், வசந்தன், வனிதா, அமரர் வசந்தி ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.

மற்றும், ரவிச்சந்திரன், கணஸ்வினி, சுகன்யா ஆகியோரின் மாமியாரும் ஆவார். சங்கவி, சகானன், அம்சஜன், அக் ஷயா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 03.11.2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலை 10.00 மணியளவில் இடம்பெற்று தகனக்கிரியைக்காக பொக்கணை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்லை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
0759173609

சுகானன் இல்லம்
ஊரெழு மேற்கு
சுன்னாகம்

Related Articles

Leave a Reply

Back to top button