இலங்கைசமீபத்திய செய்திகள்
சிறுப்பிட்டியில் போதைப் பொருளுடன் பொலிஸாரிடம் மாட்டிய போதை அடிமைகள்
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது போதைப் பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுப்பிட்டி – கலைஒளிப் பகுதியிலேயே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 99 கிராம் ஹெரோயின், 1500 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.