துணுக்காய் பிரதேச செயலகத்தின் பண்பாட்டுவிழா சிறப்பாக இடம்பெற்றது
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா இன்று (18) காலை 9.00 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
துணுக்காய் பிரதேச செயலாளர் ச.லதுமீரா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சி.ராஜமல்லிகை, வவுனிக்குள நீர்ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி. கை.பிரகாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கௌரவ விருந்தினராக துணுக்காய் பிரதேச மூத்த கலைஞர் பரமு தணிகாசலம் கலந்து சிறப்பித்தார்.
விருந்தினர்கள் பாண்பாட்டு நடனங்கள், வாத்தியங்கள் முழங்க மற்றும் கலை கலாசார ஊர்வல பவனியுடன் அழைத்து வரப்பட்டனர்.