மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது ஸ்கொட்லாந்து
ரி-20 உலக கிண்ண முதல் சுற்றுப்போட்டியில் ஸ்கொட்லாந்து மேற்கிந்திய தீவுகளை வெற்றி கொண்டு புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளது.
குழு B யைச் சேர்ந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கான போட்டிகள் நேற்று (17) ஹொபார்ட் நகரில் இடம்பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பாட களமிறங்கியது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஸ்கொட்லாந்து அணியின் சார்பில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஜோர்ஜ் முன்ஸி 53 பந்துகளை எதிர்கொண்டு 9 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களைப் அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
161 ஓட்டங்களை வெற்றி இலக்காககொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 பந்துமரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.