இலங்கைவிளையாட்டு
ஊரெழு றோயல் அதிரடி கிண்ணத்தை தட்டித் தூக்கியது
திருநெல்வேலி மாகாத்மா விளையாட்டுக்கழகம் யாழ்.லீக்கின் அனுசரணையுடன் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
இன்று (02) மாலை நல்லூர் பிரதேசசபை பொது மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உரும்பிராய் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் மோதியது.
இப்போட்டியில் 7 :1 என்ற கோல் கணக்கில் றோயல் விளையாட்டுக்கழகம் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது.
அபாரமாக ஆடிய அணித்தலைவர் கானுஜன் 3 கோல்களையும், வளர்ந்து வரும் இளம் வீரன் கவாஸ்கர் 3 கோல்களையும், தேசியத்தில் பிரகாசிக்கும் நட்சத்திர வீரர் கஜகோபன் ஒரு கோல்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக நல்லூர் பிரதேசசபை தவிசாளர் மயூரன் கலந்து சிறப்பித்தார்.