இலங்கைசமீபத்திய செய்திகள்
QR கோட் முறை இன்று நடைமுறைப்படுத்தப்படாது – அமைச்சர் அறிவிப்பு – அமைச்சரின் அறிவிப்பையும் மீறி யாழில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அலப்பறை
எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் இன்று (25) ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்ட QR கோட் முறை நடைமுறைப்படுத்தப்படாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
QR கோட் மென்பொருளில் சில மாற்றங்களை மேற்க்கொள்ள வேண்டியுள்ளதால் இன்று QR கோட் முறையில் எரிபொருள் விநியோகிப்பது ஆரம்பிக்கப்படாது எனவும், அந் நடைமுறையை நடைமுறைப்படுத்த சில தினங்கள் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், யாழ்.மாவட்டத்தில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR கோட் முறையில் தான் எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டும் என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களும், யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் அலப்பறை செய்வதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.