வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தப்பெருமானின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வும் பந்தற்கால் நாட்டுதல் நிகழ்வும் நேற்று (24.07.2022) காலை இடம்பெற்றது.
முதலில் வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் ஆலய வீதியில் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்றது. பின்னர் அதனைத் தொடர்ந்து நல்லூர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டில்கள் மூலம் நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹேற்சவத்திற்கு கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.