
புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 20 ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (11) இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே மேற்குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச 13 ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்யும் பட்சத்தில் 15 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும். அத்துடன் 19 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் கோரப்படும். 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறுமெனவும் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.