தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அடுத்த பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக்கட்சிகளுக்கு இடையில் இன்று (10) இணையவழியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சற்று முன்னருக்கு முன்னர் எனக்கு முக்கியமான இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாகவும், நம்பகத்தன்மையான உயர்மட்டத்தில் இருந்தே இத்தகவல் கிடைத்துள்ளது” எனத்தெரிவித்தார்.