“ஆறு தடைகளை உடைத்துக் கொண்டே உள்ளே குதித்தோம். நேற்றைய எமது போராட்டம் யுத்தகளம் போன்றே இருந்தது. நுழைவு கதவுக்கு மேலே எறி உள்ளே குதித்தோம். அந்தசமயத்தில் நாய்களை தாக்குவது போல இரானுவத்தினர் என்னைத்தாக்கினர். மரண பயம் இருந்திருந்தால் உள்ளே குதித்திருக்க மாட்டோம்”
மேற்கண்டவாறு நேற்று ஜனாதிபதி இல்லத்தினுள் முதல் முதலாக நுழைந்த தபாரே என்ற இளைஞன் நேற்றைய போராட்டத்தின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோட்டா கோ போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து ஈடுபட்டு வருகின்றேன். எமது நாட்டை அழித்த கோட்டபாயவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
அதானாலேயே அச்சமின்றி ஜனாபதி இல்லத்தினுள் முதல்முதலாக உள்நுழைந்தேன். துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள் என்றும் தெரியும். அதற்கு நாம் அஞ்சவில்லை துணிந்தே சென்றோம். ஜனாதிபதி ஆசனத்தின் முதலில் நானே அமர்ந்தேன் – என்றார்.