இலங்கைசமீபத்திய செய்திகள்
கொடிகாமத்தில் வாள்வெட்டு – தந்தையும் மகளும் காயம்
கொடிகாமம் கெற்பேலி பகுதியில் இன்று (06) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் தந்தையும், மகளும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டுக்குள் மதுபோதையில் உள்நுழைந்த நபரே வாள்வெட்டுத் தாக்குதலை மேற்க்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாள்வெட்டுத்தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த 52 வயதுடைய தந்தையும், 18 வயதுடைய மகளும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.