இலங்கைசெய்திகள்

திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்லமுடியாது –
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிற்கு அறிவிப்பு

திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்லாது கஸ்டத்தை வெளிப்படுத்துவோம்.

இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது நாம் எவருமே இதுவரை சந்திக்காதது. இதனை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அனுபவிக்கின்றனர் என்பது உண்மை .

இந்த வாழ்வாதார போராட்ட சூழ்நிலையில் மாணவரின் கல்விச் செயற்பாடுகளில் அக்கறை கொள்ளாத அரசாங்கம் பாடசாலைகளை நடாத்த முனைகின்றது.

இது வேடிக்கையானது பெற்றோரோடு மாணவரும் அவர்களோடு அதிபர்கள், ஆதிரியர்கள் அனைவருமே இரவு பகலாக வீதிகளில் வரிசையில் நிற்கின்றனர். இவர்கள் வீதியில் நிற்க பாடசாலையை யாருக்காக நடாத்துவது.

திங்கட்கிழமை பாடசாலை இயங்கும் முறைபற்றி அரசாங்கம் அறிவித்துள்ளது. நகர்ப்புற பாடசாலைகள் மூன்று நாட்கள் இயங்குமாம். கிராமப்புற பாடசாலைகள் முழுநாளும் இயங்குமாம். இது ஏற்புடையதா?

கிராமப்புற பாடசாலைக்குச் செல்லும் பெருமளவான ஆசிரியர்கள் நகர்ப்புறங்களில் இருந்தே செல்கின்றனர். அவர்கள் எந்த மார்க்கத்தில் பாடசாலைக்குச் செல்வது. பொதுப் போக்குவரத்து பேருந்துகள்கூட அவர்களை ஏற்றிச்செல்ல மறுக்கின்றன.

தனியாகச் செல்வதற்கு எரிபொருள் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டை சீர்செய்யும்வரை பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டோம் என கல்வி அமைச்சிற்கும், செயலாளருக்கும் மாகாணங்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அனைவருக்கும் அறிவித்துள்ளோம்.

இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
ஆகையால் திங்கள் முதல் (27.06.2022) எரிபொருள் நிலைமை சீராகும்வரை பாடசாலைக்குச் செல்ல முடியாது என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

இது நாட்டில் உள்ள அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவருக்குமான பொதுவான நெருக்கடி என்பதால் எவருமே பாடசாலைக்குச் செல்லாது. எமது கஸ்டத்தை முழுமையாக வெளிப்படுத்துவோம்.

Related Articles

Leave a Reply

Back to top button