உஸ்பகிஸ்தானில் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண தெரிவுகாண் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு இலங்கை அணியின் 23 பேர் கொண்ட இறுதி வீரர்கள் குழாமில் வடமாகாணத்தைச் சேர்ந்த நான்கு தமிழ் வீரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உத்தேச அணியினர் கட்டார் நாட்டுக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆசிய கிண்ண தகுதிகான் போட்டியில் பங்குபெறும் இறுதி வீரர்கள் குழாமின் விபரம் நேற்று வெளியிடப்பட்டது.
இதன் படி வடமாகாணத்தைச் சேர்ந்த நான்கு தமிழ் வீரர்கள் உஸ்பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், யாழ்மாவட்டதைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இலங்கை தேசிய அணியின் இறுதிக்குழாமினுள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்தவரும், யாழின் நட்சத்திர வீரருமான தர்மகுலநாதன் கஜகோபன், சென்மேரிஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த மரியதாஸ் நிதர்சன் மற்றும் இளவாலை யங்கெனறிஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஜுட்சுபன் அத்தோடு மன்னார் கில்லறி விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த எஸ். ஜேசுதாசன் ஆகிய தமிழ் வீரர்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இலங்கை முதல் போட்டியில் 8ஆம் திகதி உஸ்பகிஸ்தானையும், 11ஆம் திகதி தாய்லாந்தையும், 14ஆம் திகதி மாலைதீவுகளையும் எதிர்கொள்ளவுள்ளது.
அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணி விபரம்,
சுஜான் பெரேரா (அணித் தலைவர்), தர்மகுலநாதன் கஜகோபன், அசிகுர் ரஹ்மான், ஷரித்த ரத்னாயக்க, ஹர்ஷ பெர்னாண்டோ, ஷலன சமீர, மெஹமட் பசால், மொஹமட் ஆகிப், கவீஷ் லக்பிரிய, பிரபாத் அறுனசிறி, ஷமோத் டில்ஷான், அப்துல் பாசித், , மரியதாஸ் நிதர்சன், ஷதுரங்க மதுஷான், S ஜேசுதாசன், மொஹமட் சபீர், அபீல் மொஹமட், மொஹமட் சிபான், ஷெனால் சந்தேஷ், சசன்க டில்ஹார, மொஹமட் அமான், ஜூட் சுபன், டிலன் டி சில்வா