தீவிரம் எடுக்கும் குரங்கு அம்மை நோய்
உலக நாடுகளில் குரங்கு அம்மை மிகவும் விரைவாக பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையிலும் இத்தொற்றினை கண்டறிவதற்கான வசதிகள் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழத்தில் காணப்படுவதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்ர டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஆபிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை நோய் அடையாளம் காணப்படுள்ள நிலையில் மிகவும் தீவிரமாக பரவி வருகின்றது.
அத்துடன், ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், சுவீடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் தொற்று தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குரங்கு அம்மை நோய் தொடர்பில் இலங்கையர்கள் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.