தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் தாக்குதலை மேற்க்கொள்ள மீண்டும் தயராகி வருவதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக இந்தியாவின் த இந்து செய்தி நிறுவனம தகவல் வெளியீட்டுள்ளது.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்க்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய உளவுத்துற சுட்டிக்காட்டியுள்ளதாக செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலர் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளதாகவும், இதனால் தமிழ் நாட்டின் கடலோரப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் செயலற்ற வங்கி கணக்கில் இருந்த பெரும் தொகையான நிதியை எடுக்க முற்பட்ட நிலையில் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்க்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இலங்கையில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு நிதி திரட்டுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளதாக இந்திய உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளதாக செய்திசேவை குறிப்பிட்டுள்ளது.