வெசாக் பண்டிகையை முன்னிட்டு 244 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அபராதம் செலுத்த தவறியவர்கள் மற்றும் 40 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களே ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.