நாட்டின் நிலமை மிகவும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. பிரதமர் மஹிந்தவும் பதவி விலகியுள்ளார். நாட்டின் அணைத்து அதிகாரங்களும் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது ஆபத்தானது எனவே, ஜனாதிபதியும் உடன் பதவி விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் நெருக்கடி நிலமைக்கு ஜனாதிபதியும், பிரதமருமே பொருப்பு, அதனால் தான் மக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.
பிரதமர் பதவி விலகியுள்ளார். ஜனாதிபதி உடன் புதிய பிரதமரை நியமித்துவிட்டு பதவி விலக வேண்டும் என்றார்.