இடைக்கால அரசாங்கத்தில் சஜித் பிரேமதாஸ பிரதமராக பதவியேற்க தயார் என்றால் ஶ்ரீலங்கா சுகந்திரக்கட்சி ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாசங்கத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.