யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துவகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதாக வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவசர சத்திரசிகிச்சைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சத்திரசிகிச்சைகளைத் தவிர மற்றைய சத்திரசிகிச்சைகளை மேற்கோள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.