யாழ்ப்பாணத்திற்கு இன்று (02) விஜயம் மேற்க்கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 11.30 மணியளவில் தனியார் விடுதி ஒன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில், தமிழரசுகட்சியின் தலைவரும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா, சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சீ.வி.கே.சிவஞானம், த.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.