ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் ராஜாபக்சாக்களுக்கு எதிராக நாட்டில் தொடர்ச்சியாக போராட்டாங்கள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ராஜாபக்ச சகோதர்கள் நேற்றிரவு (25) திடீரென சந்தித்து மந்திராலாசோசணையில் ஈடுபட்டதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சந்தில் ஜனாதிபதி கோட்டபாய, பிரதமர் மஹிந்தராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான பசில்ராஜ பக்ச, சமல் ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இச்சந்திப்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் என்பனபற்றி பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.