அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்க்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக மக்கள் மேற்க்கொண்டுவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், பல்கலைக்கழகங்களின் கல்வி கற்றல் நடவடிக்கைகள் அனைத்தையும் உடன் ஆரம்பிக்குமாறும் தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் நாளையும், நாளை மறுதினமும் ஈடுபட உள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.
நாளை மறுதினம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து அனைத்துப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் நடைபவனியாக காலிமுகத்திடலுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.