நாட்டில் தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றமையால் மக்கள் தொடர்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கோதுமைமாவின் விலையை கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 50 ரூபாவால் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.