அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகனச்சாரதி நேற்று (21) இரவு இனந்தெரியாதவர்களால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டுக்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பிலியந்தலை, மாவிட்டரை, கம்வனவத்தையைச் சேர்ந்த 41 வயதுடைய எபசிங்க கனிஷ்க என்பவரே கொலைசெய்யப்பட்டவராவர்.