மலையகத் தமிழரின் அபிலாசைகள் அடங்கிய ஆவணம் தமிழ் முற்போக்கு கூட்டணியினரால் நேற்று (16) ஜப்பானிய தூதுவரிடம் கையளிக்க்ப்பட்டது.
இந்நிகழ்வு ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றது. இவ்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம்,
வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு ஆவணத்தை தூதுவரிடம் கையளித்தனர்.