கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலதா மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாராலேயே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 29 மற்றும் 30 வயதுடைய அம்பிட்டிய மற்றும் பொல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்களென குறிப்பிடப்பட்டுள்ளது.