ஆந்தை
பொலிஸார் மீது பலர் தவறான கருத்துக்கள் இருந்த போதும் ஒரு சில மனிதநேயம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அந்த வகையில்
ஆந்தை குஞ்சு ஒன்று பொலிஸ் நிலையத்தில் பறக்க முடியாத நிலையில் காணப்படத்தை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர் அதைப்பத்திரமாக பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.
இவ்நெகிழ்ச்சிச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று (09) பதிவாகியது.
பொலிஸரால் ஒப்படைக்கப்பட்ட ஆந்தை குஞ்சு மருத்துவ சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்கள கால் நடை வைத்திய நிலையத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.