காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்க்கொள்வதற்கு 25 விசாரணைக் குழுக்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“காணாமல் போனமை தொடர்பான 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிவுறுத்துவதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமித்து துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது” என்றார்.