யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் பாய்ந்து இளைஞன் ஒருவர் இன்று (04) மதியம் தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவமானது கோவில் வீதிக்கு அருகேயுள்ள புகையிரத தண்டவாளத்தில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு புகையிரதம் மீது பாய்ந்து உயிர்மாய்த்துள்ளார்.
இச்சம்பவத்தில் அரியாலையைச் சேர்ந்த பரமேஸ்வரன் இலக்சன் (வயது 25) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.