உடனுக்கு அமுலுக்கு வரும் வகையில் அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவன்ச, உதய கமன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதுடன், சில அமைச்சுக்களில் மாற்றங்களும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதிக்கு உள்ள விசேட அதிகாரங்களின் அடிப்படையிலேயே இவ் அமைச்சுக்களில் மாற்றங்கள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், உதய கமன்பில பதவிவகித்து வந்த மின்சக்தி அமைச்சுப்பதவி காமினி லொக்குகேக்கு வழங்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச பதவிவகித்து வந்த கைத்தொழில் அமைச்சர் பதவி தினேஷ் குணவர்த்தன அவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், எரிசக்தி அமைச்சராக பவித்திரா வன்னியராச்சி, போக்குவரத்துறை அமைச்சராக திலும் அமுனுகம மற்றும் கல்வி அமைச்சராக எஸ்.பி
திஸாநாயக்கா ஆகியோர் உடன் அமுலுக்குவரும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.