நாட்டில் தற்போது எதிர்நோக்கப்பட்டுவரும் பாரிய பிரச்சனைகள் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விட மோசமானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது கையிருப்பில் உள்ள டீசல் நான்கு நாட்களுக்கு மட்டுமே போதுமானது. டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று நாட்டைவந்தடைய உள்ளதாக தெரிவித்தார்.
நாட்டில் நாளொன்றுக்கு 5000 மெற்றிக்தொன் டீசல் பயன்படுத்தப்பட்டுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சனைக்கு பிரதான காரணம் டொலர் இன்மையே ஆகும் என்றார்.