நாடு தற்போது சந்தித்துவரும் பொருளாதார பாரிய பிரச்சனையால் நாட்டில் பல தொழிற்துறைகளும் பாதிப்படைந்து வருகின்றன.
அவ்வகையில், பேக்கரி உற்பத்தித் தொழிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திப்பொருட்களுக்குத் தேவையான மூலப்பொருட்களான கோதுமை மா, பட்டர், மாஜரின், பாம் எண்ணெய் போன்றவற்றிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் ஒரு மாதத்திற்கு பேக்கரி தொழிலை மேற்க்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
குறித்த மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் ஏற்ப்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையே காரணமாக உள்ளது என மேலும் அவர் தெரிவித்தார்.