மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தால் தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ள குடும்பங்களுக்கு உதவித்திட்டங்கள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அவ்வகையில் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த ரகுலேஸ்வரன் சுமித்திரா குடும்பத்தினருக்கு இவ் உதவிச் செயற்றிட்டம் நேற்று வளர்மதி சனசமூக நிலையத்தால் (27) முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்ட வேலைகளை ஆரம்பித்துக் கொள்வதற்கு நிதி இல்லாது பெரும் சிரமத்திற்குள்ளான குறித்த குடும்பத்திற்கு ஆரம்பகட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்கான நிதி வழங்கி வைக்கப்பட்டது.
இவ் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினை வளர்மதி சனசமூக நிலையத்தின் கிளை அமைப்பான கடனா வளர்மதி இளையோர் ஒன்றியத்தினரால் இரண்டு லட்சத்து பதினான்காயிரம் ரூபா நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.