பளை நகரப்பகுதிக்கு அண்மையிர் இன்று (25) அதிகாலை 1.00மணியளவில் யாழ் – கண்டி பிரதான வீதியில் ஒருவர் கீழே வீழ்ந்து கிடந்துள்ளார்.
இந்நிலையால்,அங்கு நின்றவர்களால் உடனடியாக அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குறித்த நபர் இறந்து பல மணி நேரமாகி விட்டதாக கடமையில் உள்ள வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இறந்தவர் பளை முல்லையடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளந்திரையன் என அடையாளம் காணப்பட்டுள்ளளது.
மரணத்திற்கான இதுவரை அறியப்படாத நிலையில், பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.