தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரபல அமைச்சர் ஒருவர் 12 மில்லியன் ரூபாவிற்கு மேல் நிதி செலுத்தாத நிலையில், வீட்டு மின்இணைப்பைத் துண்டிக்கச் செல்லும் மின்சார ஊழியர்களை அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் அச்சுறுத்துவதாக இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
கிருலப்பனை சரணங்கர வீதியில் உள்ள வீட்டில் வசித்துவரும் பிரபல அமைச்சர் ஒருவரே ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மின் கட்டணத்தை இதுவரையில் செலுத்தவில்லை என இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படமையினால் வீட்டு மின் இணைப்பைத் தடை செய்வதற்கு கிருலப்பனை மின் பொறியியலாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் பல முறை அந்த வீட்டிற்கு சென்ற போதிலும் அதன் பாதுகாப்பு அதிகாரிகள் கதவினை திறக்காமையினால் மின்துண்டிப்பை மேற்கொள்ளாமல் முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு மின்சாரம் வழங்கும் தூணில் ஏறி மின்சாரத்தை தடை செய்ய முடியும்.
ஆனால், இது பிரபல அமைச்சரின் வீடு என்பதால் அந்த நடைமுறையை மேற்கொள்ள முடியாது உள்ளதாக இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.