எரிபொருள் விலையை மீண்டும் அரசாங்கம் அதிகரித்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்வரும் ஜீன் மாதம் வரை பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே கடந்த மாதம் 3ஆம் திகதி பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையை அதிகரித்தால் பஸ் கட்டணத்தை குறைந்த அளவேனும் அதிகரிக்க வேண்டுடிய நிர்பந்தம் ஏற்படும். அல்லது எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதை அனைத்து தனியாா் பஸ் உரிமையாளர் சங்கத்தினரும் ஒன்றிணைந்து போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.