இலங்கையில் மேலும் 30 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 5 பெண்களும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது.