இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!!

Fuel

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு மத்தியில் இன்றைய தினம் மீண்டும் எரிபொருள் விலையினை அதிகரிக்குமாறு அதனுடன் தொடர்புடைய அமைச்சரிடம் யோசனை ஒன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி எரிபொருள் விலையினை அதிகரிக்குமாறு அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் யுக்ரைனுக்கு இடையிலான பதற்ற நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக தொடர்ந்தும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி, பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.3 சதவீதத்தால் அதிகரித்து, 94.44 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

அமெரிக்காவின் டபிள்யு, ரீ.ஐ ரக மசகு எண்ணெய்யின் விலை 3.6 சதவீதத்தால் உயர்வடைந்துள்ள நிலையில் 93.10 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

இதற்கமைய, எரிபொருள் விலையானது இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்படும் சகல வகை டீசல் லீற்றர் ஒன்றுக்கு 50 ரூபாவும், பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 16 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என எழுத்து மூல கோரிக்கையினை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் இன்றைய தினம் கையளிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button