பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள வைத்தியர்கள் குழுவொன்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சிகிச்சை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டொக்டர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொவிட் நோய்த்தொற்றின் அறிகுறிகள் வெளிக்காட்டப்படாததால் கொவிட் வைரஸ் பரவுவது மேலும் துரிதப்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதைத் தவிர்க்க சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.