நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுதாரண உயர்தரப் பரீட்சை இன்று (07) ஆரம்பமாகவுள்ளது.
2348 பரீட்சை மையங்களில் நடைபெறும் இப்பரீட்சையில் மூன்று லட்சத்து நாற்பத்து ஐந்தாயிரத்து இருநூற்று நாற்பத்து இரண்டு பேர் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.
இதில், இரண்டு லட்சத்து எழுபத்து ஒன்பதாயிரத்து நூற்று நாற்பத்து ஒரு மாணவர்கள் பாடசாலை விண்ணப்பதாரிகள் ஆவார். மிகுதி பரீட்சார்த்திகள் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆவார்கள்.
பரீட்சை நடைபெறும் நாட்களில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.