கிளிநொச்சி சுகாதார துறைக்கே இழுக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்படும்
கண்டாவளை வைத்திய அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் சுகாதார பணிப்பாளர் நாயகம் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கடிதம்,மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்
சி.சிறிதரனால் சுகாதார துறை பணிப்பாளர்
நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.02.02.2022 திகதியிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினரால் எழுதப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கண்டாவளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றும் வைத்திய அதிகாரி தனது தனிப்பட்ட நலன்களையும், சுய விளம்பரப்படுத்தலையும் நோக்காகக் கொண்டு நான் அவருடன் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவினை ஊடகங்கள் வாயிலாக
பகிரங்கப்படுத்தியுள்ளமை எனது சிறப்புரிமையை மீறுவதாகவும் தனிப்பட்ட
நற்பெயருக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளது.குறித்த வைத்தியரின் சகோதரனும் எனது நண்பருமான வைத்தியர் சயந்தகுமார் என்னுடன் தொலைபேசி மூலம் உரையாடி உளவியல் ரீதியாக தாக்கம் அடைந்துள்ள தனது சகோதரியோடு கலந்துரையாடுமாறு என்னை மிக வினயமாக கேட்டுக்
கொண்டதற்காக 27.01.2022 திகதி மாலை அவருடன் தொடர்பு கொண்டு உரையாடி
இருந்தேன்நல்லெண்ண நோக்கில் நான் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை எனது அனுமதி இன்றி பதிவு செய்து அன்றைய
தினமே அதனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள்
வாயிலாக பகிரங்கப்படுத்தி இருப்பது எனது கௌரவத்திற்கு இழுக்கை
ஏற்படுத்தியுள்ளது.எனவே, மேற்படி தொலைபேசி உரையாடலை எனது அனுமதி இன்றி பதிவு செய்தமைக்கும்
அதனை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தியமைக்கும் எதிராக உடனடியாக நடவடிக்கை
எடுப்பதோடு, முழுக்க முழுக்க தனது சுய விளம்பரபடுத்தலை மையமாகக்கொண்டு
கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத் துறைக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் கண்டாவளை சுகாதார வைத்திய
அதிகாரி மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அது தொடர்பில் எனக்கு அறியத்
தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.