இலங்கைசெய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம்

காரைநகர் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், காரைநகர் கடற்றொழில் சங்கங்கள், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் சமாசம் மற்றும் மீனவ சமூகம் ஆகியன இணைந்து இன்று காரைநகர் பிரதேச சபையில் இருந்து காரைநகர் பிரதேச செயலம் வரை ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர்.

இந்திய இழுவை படகுகளின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பிரதேச செயலக அதிகாரி ஒருவரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அந்த மகஜரில் உள்ளதாவது,

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி சட்டவிரோதக் கடற்தொழிலிலே ஈடுபடுவதனால் எமது கடல் வளமும், கடல் சூழலும், கடற்தொழில் உபகரணங்களும், வாழ்வாதாரமும் அழிக்கப்படுவதனால் மிகப்பெரிய பாதிப்புக்களுடன் பத்து வருடங்களுக்கு மேலாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றோம்.

பல போராட்டங்கள், மகஜர்கள் கையளித்தும் இதுவரை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாதையிட்டு மீனவ சமூகம் கவலையடைகிறது.

2017 , 2018 ம் ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டு மீனவர் ஒழுங்குபடுத்தல் தடைச்சட்டத்தையும் , உள்ளூர் இழுவைமடி தொழில் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தக் கோரல் , கடந்த பத்து வருடங்களாக இந்திய மீனவர்களினால் பலகோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது . அதற்கான நட்ட ஈட்டினைப் பெற்று வழங்க ஆவன செய்யுமாறும் , மேற்கூறப்பட்ட கோரிக்கைகள் மீனவர்களின் நீண்டகாலமாகத் தொடர்கிறது.

இதற்கு தீர்வினைப் பெற்று வாழ்வாதாரத்தினையும் கடல் வளத்தினையும் எதிர்கால சந்ததியினருக்கு காப்பாற்றி கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் – என்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button