இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடையையடுத்து இலங்கையில் மலர் வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலர் வளர்ப்பாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக மலர்களை பெருமளவில் ஏற்றுமதி செய்தவர்கள்கூட தற்போத கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல சுப நிகழ்வுகளுக்கு மலர் பந்தல் அமைப்பதற்கான கட்டணமும் தற்போது அதிகரித்துள்ளது.
அதேவேளை, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கொண்டு செல்லப்படும் மலர் வளையங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது எனச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.