முத்தமிழ் அரங்கம்.
மௌனம் – சங்கரி சிவகணேசன்!!
ஒரு தனிமையில்
எதையும் தேடாது தனித்திருக்க
மௌனம்
தேடி வந்து காற் தடங்களை
பதித்திருந்தது மனவறைக்குள்..
நானும் மௌனமும்
ஒரு பூரண தனிமையொன்றில்
சந்தித்துக் கொண்டோம்..
ஒரே அறையில்
இருவரும் இருப்பதென்பதை
காலம் நிர்ணயித்திருந்தது..
மூழ்கும் மௌனத்துக்குள்
தனிமை மூழ்கும் வரை
மூழ்கினேன் நான்..
நானும்
மௌனமும்
அர்த்தநாரியாகி
மனவெளியின் அடர் ஔிக்குள்
பூரணமானோம்..