இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்குள் வர தடை
கோவிட் தொற்று நோய்க்கான இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்குள் வரும் போது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் இரண்டு தடுப்பூசிகளை பெறாத நபர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை விதிக்கும் சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
சட்ட வரையறைக்குள் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குள் வருவதற்கு தடைவிதிக்க முடியுமா என நான் கடந்த வாரம் சட்டமா அதிபரிடம் கேட்டிருந்தேன்.
சட்ட ரீதியாக அதனை செய்ய முடியும் என இன்று எனக்கு பதில் கிடைத்துள்ளது. சட்டரீதியாக இதனை செய்ய நான் எதிர்பார்த்துள்ளேன்.
உலகில் முன்னேறிய பல நாடுகள் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளன. இதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்வார்கள், அதனை நாங்கள் எதிர்நோக்க நேரிடும்.
எனினும் சுகாதார அமைச்சு என்ற வகையில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.