தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவினர் இன்று (08) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
டெங்கு அபாய வலயமாக அடையாளங்காணப்பட்டுள்ள 59 சுகாதார வைத்திய பிரிவுகளில் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியேஇந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முப்படையினர்இ மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பொதுச்சுகாதார வைத்திய நிபுணர் தெரிவித்தார்
இவ் வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று (07) வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 22இ902 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.