பருவநிலை மாற்றத்தினால் 2050 ஆம் ஆண்டிற்குள் பிரித்தானியாவில் சுமார் 3 மில்லியன் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தினால் சுமார் மூன்று மில்லியன் நகரங்கள் நீரில் மூழ்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காமா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன், ஒரு வரைபடத்தையும் சில படங்களையும் வெளியிட்டுள்ளது. இது அப்பகுதியில் வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளாஸ்கோவில் நடைபெறும் COP26 காலநிலை உச்சிமாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, உலகத் தலைவர்கள் புவி வெப்பமயமாதலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னதாகவே இந்தத் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
காமா நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பிரித்தானியாவில் உள்ள மூன்று மில்லியன் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் எனவும், ஒவ்வொரு பத்து வீட்டிற்கு ஒரு வீடு என்னும் விகிதத்தில் மூழ்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் விகிதம் மோசமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 29 ஆண்டுகளில் Great Yarmouth இல் உள்ள அனைத்து கட்டிடங்களில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் Portsmouth இல் ஐந்தில் ஒரு கட்டிடம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.
அதிலும் பருவநிலை மாற்றத்தினால் வெப்பமான சூழல் வறண்ட கோடை காலத்தை ஏற்படுத்தும். இது கட்டுமான பொருட்களில் ஒழுங்கற்ற பிளவை உண்டாகும். இது கட்டிடங்களின் அமைப்புகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.