இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ள அரச மருந்தக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
அரச மருந்தக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன (Dr. Prasanna Gunasena) தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது பதவி விலகல் தொடர்பிலான கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு (Gotabaya Rajapaksa) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
மருத்துவ மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக இவ்வாறு தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் டொக்டர் பிரசன்ன கூறியுள்ளதாக தெரியவருகிறது.
பிரபல நரம்பியல் மருத்துவரான டொக்டர் பிரசன்ன கோவிட் பெருந்தொற்று நிலைமைகளில் மிக முக்கியமான சேவையை வழங்கியவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் ஜயகொடியும் (Lalith Jayakody) பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், சுகாதாரத்துறையைச் சேர்ந்த பலர் தங்களது பதவியை இராஜினாமா செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.